கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 11 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போகாட்,

மத்திய கொலம்பியாவின் சுததவுசா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளி ஒருவரின் கருவியில் இருந்து தீப்பொறி பட்டு, அங்கு பரவியிருந்த வாயுக்கள் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தீப்பற்றிய பகுதியில் 10 பேர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி கவர்னர் நிகோலஸ் கார்சியா கூறியுள்ளார்.

மேலும் தொழிலாளர்கள் 900 மீட்டர் ஆழத்தில் சிக்கியுள்ளனர். இதனால் அங்கு செல்வது மீட்புக்குழுவினருக்கு கடினமான பணியாக உள்ளது என்றும், உள்ளே செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எண்ணெய் மற்றும் நிலக்கரி கொலம்பியாவின் முக்கிய ஏற்றுமதியாகும். அங்கு சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com