இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து குணம் அடைய விருப்பம்: இம்ரான்கான் டுவிட்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் விரைந்து குணம் அடைய விரும்புவதாக இம்ரான் கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து குணம் அடைய விருப்பம்: இம்ரான்கான் டுவிட்
Published on

இஸ்லமாபாத்,

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மன்மோகன் சிங் விரைவில் குணம் அடைய விருப்பம் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com