விண்வெளியில் 6 மாத பணி நிறைவு! 195 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய ரஷிய வீரர்கள் குழு!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின், மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.
Image Credit:www.space.com
Image Credit:www.space.com
Published on

மாஸ்கோ,

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாத பணியை நிறைவு செய்துவிட்டு 3 ரஷிய விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்குத் திரும்பினர்.

ஒலெக் ஆர்டெமிவ், டெனிஸ் மாட்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகிய 3 ரஷிய விண்வெளி வீரர்கள் கசகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கே 148 கிலோமீட்டர்கள் (91 மைல்) தொலைவில் பத்திரமாக தரையிறங்கினர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின், மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட பின், அவர்கள் 195 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பினர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின், ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் மட்டுமே ஒத்துழைப்பு கடைசியாக எஞ்சியுள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த குழு ஒன்று ரஷியாவின் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷியாவின் செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரோஸ்கோஸ்மோசால் இயக்கப்படும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com