சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 7 பேர் பலி

சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 7 பேர் பலி
Published on

பீஜிங்,

கிழக்கு சீனாவின் ஷான்டாக் மாகாணத்தில் ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. ஷெங்சுயு என்ற இடத்துக்கு அருகே சென்றபோது இந்த டிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதில் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் மீது இந்த டிராக்டர் மோதியது.

இந்த விபத்தில் டிராக்டர்களில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com