சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா...?

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவில் காணப்படும் ஓட்டையை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா...?
Published on

சூரியனின் அமைப்பு, செயல்பாடு உள்ளிட்டவற்றை பற்றி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் ஆய்வு செய்து வருகிறது. இதில், அதிர்ச்சி தரும் விசயம் சமீபத்தில் தெரிய வந்து உள்ளது.

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுகிறது. இது கரோனா ஓட்டை என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று உள்ளது.

இந்த கரோனா ஓட்டையை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23-ந்தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்தது. இதனால், புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனை முன்னிட்டு அந்த பெரிய ஓட்டையில் இருந்து புறப்பட கூடிய, மணிக்கு 2.9 லட்சம் கி.மீ. வேகத்தில் வீச கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும் அது வருகிற வெள்ளி கிழமை நடைபெறும் என்றும் news.com.au என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதனை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், பூமியின் காந்தபுலம், செயற்கை கோள்கள், மொபைல் போன்கள் மற்றும் ஜி.பி.எஸ். போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த சூரிய காற்று அல்லது புவிகாந்த புயல்கள், விண்வெளியில் உடனடியாக பரவுவதற்கு கரோனா ஓட்டை அனுமதிக்கிறது. தற்போது ஏற்பட்டு உள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 லட்சம் கி.மீ. முதல் 4 லட்சம் கி.மீ. வரை பரந்து விரிந்து உள்ளது.

இதன்படி, 20 முதல் 30 பூமிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வைக்கப்பட்டால் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உள்ளது என்று நாசாவின் அறிவியல் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் யங் என்பவர் கூறியுள்ளார். வெள்ளி கிழமை என பொதுவாக கூறியபோதும், ஆய்வாளர்கள் கூறிய விசயம் அறிவியல் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com