வடக்கு பிரான்சில் ஜெர்சி தீவில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; பலர் மாயம்

வடக்கு பிரான்சில் ஜெர்சி தீவில் குடியிருப்புகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-12-11 07:32 IST



லண்டன்,


வடக்கு பிரான்சின் கடலோர பகுதியில் அமைந்த ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி ஜெர்சி மாகாண தலைமை காவல் அதிகாரி ராபின் ஸ்மித் கூறும்போது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 20 முதல் 30 பேர் வரை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

குண்டுவெடிப்பின்போது, கட்டிடத்தின் வழியே நடந்து சென்றவர்களில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்