குஜராத் கடற்பகுதியில் 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் பறிமுதல் எல்லை பாதுகாப்பு படை அதிரடி

பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது அங்கே தடையை மீறி மீன்பிடித்து வருகின்றனர்.;

Update:2022-08-05 03:07 IST

ஆமதாபாத், 

குஜராத்தின் கட்ச் மாவட்ட கடற்பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது அங்கே தடையை மீறி மீன்பிடித்து வருகின்றனர்.இந்த நிலையில் இருநாட்டு எல்லை அருகே உள்ள ஹரமி நலா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே பாகிஸ்தானை சேர்ந்த சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்துக்ெகாண்டிருந்தனர்.

இந்திய வீரர்களை பார்த்ததும், அவர்கள் 2 படகுகளை விட்டுவிட்டு தங்கள் கடற்பகுதிக்குள் தப்பி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த படகுகளை கைப்பற்றிய வீரர்கள், அவற்றை சோதனையிட்டனர். ஆனால் அவற்றில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை. எனினும் அவற்றை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்