உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு; உறுதி கூறிய அமெரிக்கா, ஜெர்மனி

ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உறுதிமொழி கூறியுள்ளன.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு; உறுதி கூறிய அமெரிக்கா, ஜெர்மனி
Published on

வாஷிங்டன்,

ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் சமீபத்தில் சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார். 3 ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த ஜி7 நாடுகளின் முதல் தலைவர் என்ற வகையில், இந்த சந்திப்பு அமைந்து இருந்தது.

இதன்பின்னர் ஜின்பிங்கிடம் நடந்த சந்திப்பில், ரஷியாவின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ரஷியா போரை நிறுத்த சீனா வலியுறுத்த வேண்டும் என்றும் அதிபர் ஓலப், ஜின்பிங்குடனான சந்திப்பில் அவரிடம் கேட்டு கொண்டார்.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஸ் ஆகியோர் தொலைபேசி வழியே பேசியுள்ளனர். இதில், சீன பயணம், ரஷிய விவகாரம் உள்ளிட்டவற்றை பற்றி அதிபர் பைடனிடம், ஓலப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறோம். உக்ரைன் நாடு தன்னை தற்காத்து கொள்வதற்கு ஏற்ப பொருளாதாரம், மனிதநேயம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஆதரவு ஆகியவற்றை அளிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.

ரஷியாவின் சமீபத்திய அணு ஆயுத மிரட்டல்கள் பொறுப்பற்ற தன்மை என இரு தலைவர்களும் பேசும்போது ஒப்பு கொண்டுள்ளனர்.

விதிகளின் படியான சர்வதேச நடைமுறை, மனித உரிமைகள் மற்றும் முறையான வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் பொறுப்புடன் செயலாற்றுவதற்கான பகிர்தலையும் இரு நாட்டு தலைவர்களும் உறுதி செய்துள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com