பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி
Published on

ரியோடி ஜெனிரோ,

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதேவேளை, மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com