டுவிட்டர் நிறுவனம் மீது எலான் மஸ்க்கும் வழக்கு

44 பில்லியன் டாலருக்கு பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

Update: 2022-07-30 10:25 GMT

வாஷிங்டன்,

44 பில்லியன் டாலருக்கு பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். ஆனால், போலி கணக்கு பற்றிய விவரங்களை சரிவர டுவிட்டர் நிறுவனம் வழங்க மறுத்துவிட்டதாக இந்த ஒப்பந்தத்தை கைவிட்டர். இதனால், கோபம் அடைந்த டுவிட்டர் நிறுவனம், எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 17 ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு வெளிவந்த சில மணிநேரங்களில் டுவிட்டர் நிறுவனத்தின் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதுதொடர்பாக 164 பக்க ஆவணம் நீதிமன்றத்தில் எலான் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை என்றாலும், விரைவில் நீதிமன்ற திருத்தங்களுடன் இந்த ஆவணம் வெளியிடப்படும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்