ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் 32 பேர் பிணைக்கைதிகளாக கடத்தல்

ரெயில் நிலையத்திற்குள் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

Update: 2023-01-08 21:31 GMT

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், கொள்ளை, கொலை,பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த அமைப்புகள் மீது நைஜீரியா பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் டாம் இகிமி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கு ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

மேலும், ரெயில் நிலையத்தில் இருந்த 32 பயணிகளை அந்த நபர் பிணைக்கைதியாக கடத்தி சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பாதுகாப்பு படையினர் பயணிகளை கடத்தி சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கடத்தப்பட்ட பயணிகளையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் நிலையத்தில் பயணிகளை துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றது பயங்கரவாதியா? என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்