பிலிப்பைன்ஸ் கவர்னர் மீது துப்பாக்கிச்சூடு - பாதுகாவலர்கள் 4 பேர் பலி

பிலிப்பன்சில் கவர்னரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் கவர்னர் மீது துப்பாக்கிச்சூடு - பாதுகாவலர்கள் 4 பேர் பலி
Published on

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் உள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் லனொ டி சுர் மாகாண கவர்னர் அலண்டோ அடியாங் இன்று காரில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக பாதுகாவலர்களும் உடன் சென்றனர்.

லனொட் டி சுர் மாகாணம், புகிங்கான் மாகாண எல்லைப்பகுதி கிராமத்தில் அலண்டோ காரில் சென்றபோது அவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் கவர்னர் லனொட் டி சுர் படுகாயமடைந்தார். ஆனால், அவரது பாதுகாவலர்கள் 4 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். கவர்னர் லனொட் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com