பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி அரசுக்கு எதிராக இம்ரான்கான் கட்சி பிரசாரம்!

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி இம்ரான் கானின் பிடிஐ கட்சி இந்த பிரசாரத்தை தொடங்கவுள்ளது.
பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி அரசுக்கு எதிராக இம்ரான்கான் கட்சி பிரசாரம்!
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஆளும் ஷாபாஸ் ஷெரீப் கூட்டணி அரசுக்கு எதிராக ''தேர்தலை நடத்துங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்'' என்ற பிரச்சாரத்தை முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தொடங்க உள்ளது.

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரி ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு அழுத்தம் கொடுக்க இம்ரான் கானின் பிடிஐ கட்சி இந்த இயக்கத்தைத் தொடங்கவுள்ளது.

லாகூரில் உள்ள இம்ரான் கானி இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் 'தேர்தலை உருவாக்குங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்' என்ற பிரச்சாரத்தை இம்ரான்கான் அறிவித்தார்.முதல் கட்டமாக, பிடிஐ கட்சி டிசம்பர் 7 முதல் 17 வரை லாகூரில் பெரிய பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com