ஒரே மின்னஞ்சல்... 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.
ஒரே மின்னஞ்சல்... 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்
Published on

வாஷிங்டன்,

உலகெங்கிலும் உள்ள டெக் நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 453 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது, கூகுள் நிறுவனம்.

கடந்த மாதம் 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது 453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com