மெக்சிகோவில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுத்த சம்பவம் ; 2 வாரத்தில் 3-வது சம்பவம்

மெக்சிகோவில் 60 பள்ளி மாணவர்கள் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-10 06:17 GMT

மெக்சிகோ:

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாஸில் உள்ள மேல்நிலை பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 60 மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அவர்கள் அனைவருக்கும் விஷம் தரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள மேலும் 2 பள்ளிகளில் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 பள்ளிகளின் மாணவர்களுக்கு விஷம் தரப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் போதை பொருள் கும்பல் இருக்கலாம் என மெக்சிகோ போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் சில பெற்றோர்கள் மாணவர்கள் அசுத்தமான தண்ணீர் அல்லது புட்பாயிஷன் ஏற்பட்டு இருக்கலாம் என நம்புகிறார்கள்.

இதையடுத்து சியாபாஸ் மாகாண காவல்துறையினர் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு விஷம் கொடுத்த பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்