நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை

நேபாள காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 85 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சி தொடர்ந்து முன்னிலை
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கும், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாணங்களின் சட்டசபைக்கும் கடந்த மாதம் 20-ந்தேதி தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத்துக்கு 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் 2 வாரங்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு, அவ்வப்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இதுவரை 163 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.

இதில் ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 85 இடங்களை கைப்பற்றி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பிரதமர் ஷெர் பகதூர் தூபா மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com