நடு வானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த போது தூங்கிய விமானிகளால் பரபரப்பு

விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடு வானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த போது தூங்கிய விமானிகளால் பரபரப்பு
Published on

சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் 37 ஆயிரம் படி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இயங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கி விட்டனர்.

இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், இதி பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்து இருக்கிறது. அதன்பிறகே விழித்த விமானிகள் இருவரும் விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com