குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் - ரஷிய அதிபர் புதின் கண்டனம்

ரஷியாவில் குழந்தைகள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் - ரஷிய அதிபர் புதின் கண்டனம்
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உத்முர்டியா மாகாணத்தில் உள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் நாஜிப்படை இலச்சினை கொண்ட தொப்பியை அணிருந்திருந்தாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் புதின், ரஷிய பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com