அலாஸ்காவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

அலாஸ்காவின் கான்ட்வெல்லில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2023-04-15 04:37 IST

அலாஸ்கா,

அலாஸ்காவின் கான்ட்வெல்லில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 49.3 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்