

வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர்.
நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. நேற்று அதிகாலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்தார். நான்சி பெலோசியின் கணவர் பாலை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றார். காயமடைந்த பால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சம்பவத்தின்போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்களுக்கும், டாக்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.