நைஜர் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது; 3 வீரர்கள் பலி

நைஜர் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி 3 வீரர்கள் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியாமி,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ராணுவத்துக்கு சொந்தமான மில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, அண்டை நாடான நைஜரின் தலைநகர் நியாமிக்கு புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்தனர்.

நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்க முயற்சி செய்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து ஹெலிகாப்டர் விமான நிலையத்துக்குள் விழுந்தது.

தரையில் மோதிய வேகத்தில் ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்தனர். எனினும் இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 ராணுவ வீரர்களும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com