ஈராக்கில் துருக்கி ராணுவம் வான்தாக்குதல்: குர்திஸ் பயங்கரவாதிகள் 23 பேர் பலி

ஈராக்கில் துருக்கி ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் குர்திஸ் பயங்கரவாதிகள் 23 பேர் பலியாகினர்.

Update: 2022-10-03 19:13 GMT

பாக்தாத்,

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் குர்திஸ்தான் பிராந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் பிகேகே எனப்படும் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியை அண்டை நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அவர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஸ் பிராந்தியமான அசோஸ் பிராந்தியத்துக்குள் துருக்கி போர் விமானங்கள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தின.

இதுபற்றி துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குர்திஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது எப்16 ரக போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 23 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்