2022-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை உச்சத்தை எட்டியதாக தகவல்

நடப்பாண்டில் உலக வர்த்தக வளர்ச்சியானது குறைந்து காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை உச்சத்தை எட்டியதாக தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022-ம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையில் அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சரக்கு மற்றும் சேவைத்துறை பற்றாக்குறை 948.1 பில்லியன் டாலர்களாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்கான பொருட்கள் மற்றும் சேவை பற்றாக்குறை அதிகரிப்பில் பொருட்களின் பற்றாக்குறையானது 9.3% அதிகரித்து 1191.8 பில்லியன் டாலராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வர்த்தகத்தில் பணவிக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு பெடரல் ரிசர்வ் வங்கி, உலகளாவிய முக்கிய மத்திய வங்கிகள் உள்ளிட்டவை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதனால் நடப்பாண்டில் உலக வர்த்தக வளர்ச்சியானது குறைந்து காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com