உக்ரைன் மற்றும் தைவானில் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் - ரஷிய அதிபர் புதின்

உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருவதாக ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டினார்.
உக்ரைன் மற்றும் தைவானில் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவே காரணம் - ரஷிய அதிபர் புதின்
Published on

மாஸ்கோ,

உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருவதாக ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டினார்.

மேலும் அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் பயணத்தை குறிப்பிட்டு பேசினார். இது குறித்து பேசிய அதிபர் புதின், மோதல் பகுதிகளில் போரை நீட்டிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர் பேசியதாவது, "இந்த மோதலை நீடிக்க அமெரிக்கா முயல்வதையே உக்ரைன் நிலைமை காட்டுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளிலும் அமெரிக்கா அதையே செய்ய முயற்சிக்கிறது.

தைவானுக்கு சென்ற அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் பயணம், ஒரு தனிப்பட்ட பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, தைவான் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும், நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் அமெரிக்க உத்தியாகும்".

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com