ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி...தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இங்கிலாந்து...!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பறிகொடுத்தது.;
Image Courtesy: ICC Twitter
துபாய்,
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக வென்றது. இந்த தொடரரை முழுமையாக இழந்ததன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது. உலக கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது.
2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி 3வது இடத்திலும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றதன் மூலம் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது.
புதிய தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்தியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் 107 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 100 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது. 7 முதல் 10 இடங்களில் முறையே வங்காளதேசம் ( 92 புள்ளிகள்), இலங்கை (92 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (71 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (69 புள்ளிகள்) அணிகள் உள்ளன.