ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

Update: 2024-02-13 10:35 GMT

Image Courtesy : AFP

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (696 புள்ளி) 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (807 புள்ளி) முதல் இடத்திலும், இலங்கையின் சமாரி அத்தபட்டு (736 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (717 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர். பேட்டிங் தரவரிசையில் மந்தனாவை அடுத்து இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (746 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் (677 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (675 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த வீராங்கனையும் இல்லை.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் ( 452 புள்ளி) முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (360 புள்ளி) 2ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (358 புள்ளி) 3ம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் (347 புள்ளி) 4ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா (345 புள்ளி) 5ம் இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்