ஏன் கால்சியம் காத்திருக்க இயலாது!

பொதுவாக பெரியவர்களுக்கு தினசரி 1000 மி.கி என்ற அளவில் கால்சியம் உட்கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.;

Update:2026-01-19 15:54 IST

நாள்தோறும் உடலின் இயக்கம், நரம்புகளின் சமிக்ஞைகள் மற்றும் எலும்புகளின் வலிமை போன்ற முக்கியமான செயல்களுக்காக, நம் உடல் கால்சியத்தையே சார்ந்துள்ளது. ஆனால் உடலில் இந்த ஊட்டச்சத்துக்களின் அளவு, நாம் அறியாமலே குறையும்போது என்ன ஆகும்?

இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடுகள் பரவலாக உள்ளன. இந்தியர்களில் 70%க்கும் மேற்பட்டவர்கள் போதிய அளவு கால்சியம்@ உட்கொள்வதில்லை. மேலும், பெரும்பாலும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் வைட்டமின் டி-ஐ உட்கிரகிக்க தேவையான சூரிய ஒளி உடலில் குறைவாக படுதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.இதனால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி என இரட்டை குறைபாடு ஏற்படுகிறது. நாளடைவில், இந்த ஊட்டச்சத்து குறைபாடு இடைவெளி, எந்த எச்சரிக்கையும் காட்டாமல், எலும்புகளை பலவீனமாக்குகிறது.ஆண்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் ஆஸ்டியோபீனியா, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற இது சார்ந்த நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆனால், இந்த பிரச்சினை எலும்புகளுக்கு மட்டுமல்ல. கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு முழு உடலையும் பாதிக்கிறது. தசைப்பிடிப்பு, உடையும் நகங்கள் மற்றும் பற்களில் பிரச்சினைகள் முதல் ஒழுங்கற்ற இதய துடிப்புகள் மற்றும் இன்சுலின் செயல்பாடு பாதிப்பு வரை பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பொறுப்பு துறப்பு: @ஹரிநாராயண் சிவி எட்.ஆல். ஃப்ரன்ட் எண்டோக்ரினால் (லாவ்சான்), 2021 ஏப்ரல் 6;12:583654.

கால்சிய இழப்பு அமைதியாகப் பரவும் நோய்

இந்தியாவில், நாம் கண்ணுக்குத் தெரியாத ஆரோக்கிய நெருக்கடியை சந்திக்கிறோம் - பெரும்பாலான மக்களின் தினசரி உணவில் கால்சியம் குறைவாகவே உள்ளது. லான்செட் குளோபல் ஹெல்த், 2024*1 -ன்படி, ஆண்களும் பெண்களும், குறிப்பாக 10 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஏற்கனவே குறைவாகவே கால்சியம் உட்கொள்கின்றனர் என அறியப்பட்டுள்ளது, எனவே இவர்கள் வலுவான எலும்புகளை உருவாக்கும் முக்கிய வாய்ப்பை இழக்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அதாவது குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை கால்சியம் தேவைப்படுகிறது. தினசரி கால்சியம் உட்கொள்தல் பரிந்துரை பெரும்பாலான பெரியவர்களுக்கு 1000 மி.கி/நாள், மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 1200 மி.கி/நாள். ஆனால் அவர்களின் உணவுகளில் இந்த அளவுகளை விட மிகக் குறைவான அளவுகளே இருக்கலாம்.

80%க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலைக்குரியது. மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள் வயது மற்றும் பகுதியைப் பொறுத்து, பரவலாக இந்த பாதிப்பு 50-94% ஆக உள்ளது என காட்டுகின்றன#.

அதோடு, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படும் அபாயத்துக்கு காரணமாகின்றன. எலும்பு வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது; இதன் அளவுகள் குறையும்போது, எலும்புகளின் மறுஉருவாக்கம் (பழைய எலும்பை அகற்றுதல்) விரைவாக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் வாழ்நாளில் 50% டிராபெகுலர் (பஞ்சு போன்ற) எலும்பையும் 30% கார்டிகல் (அடர்த்தியான) எலும்பையும் இழக்க நேரிடலாம். இந்த இழப்பில் கிட்டத்தட்ட பாதி, மாதவிடாய் நின்ற பின்பு, முதல் 10 ஆண்டுகளில் நிகழ்கிறது.*8

இதை இன்னும் ஆபத்தாக்குவது என்னவென்றால், அதிகபட்ச எலும்பு திரட்சி நிலை அடைந்த பிறகு (பொதுவாக 20 வயதுகளின் பிற்பகுதியில்), நாம் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 1% எலும்பு திரட்சியை இழக்கத் தொடங்குகிறோம். *3 இதோடு உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறைகளும் சேரும்போது அபாயம் அதிகரிக்கிறது$.

பொறுப்புத் துறப்பு: #அபர்ணா பி, முத்தாத்தாள் எஸ், நோங்கின்ரிஹ் பி, குப்தா எஸ்கே. வைட்டமின் டி டெஃபிசியன்ஸி இன் இந்தியா, ஜே ஃபேமிலி மெட் பிரைம் கேர். 2018 மார்ச்-ஏப்ரல்;7(2):324-330;  $ஜோவ் ஜே எட் ஆல்.. ஃப்ராலிட்டி ஸ்டேட்டஸ், செடன்டரி பிகேவியர்ஸ் அண்ட் ரிஸ்க் ஆஃப் இன்சிடெண்ட் ஃபோன் ஃபிராக்சர்ஸ். ஜே ஜெரோன்டோல் ஏ பயோல் சை மெட் சை.2024 செப் 1;79(9):க்ளே186. டிஓஐ: 10.1093/கெரோனா/க்ளே186.

அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள், உங்கள் உடலை கவனியுங்கள். உங்கள் உடல் போதிய அளவு ஊட்டச்சத்துக்களைப் பெறவில்லை என்றால், உங்கள் உடல் அதை உங்கள் எலும்புகளிலிருந்து எடுத்து பெறுவதால், எலும்புகளை பலவீனமாகவும் உடையக் கூடியதாகவும் மாற்றி விடும். எனவே, நீங்கள் போதிய கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவது அவசியம். உங்கள் எலும்புகளுக்கு ஷேல்கல்500 மூலம் ஆதரவு அளியுங்கள்.

வாழ்க்கையின் ஆரம்பத்தில் முன்னதாகவே வலுவான எலும்புகளை உருவாக்குவது உங்கள் வருங்காலத்திற்காக நீங்கள் செய்யக் கூடிய புத்திசாலித்தனமான விஷயங்களில் ஒன்று. அதிகபட்ச எலும்பு திரட்சியில் வெறும் 10% அதிகரிப்பது கூட, பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோடிக் எலும்பு முறிவுகளின் அபாயத்தை 50% குறைக்கும் *4 மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதை 13 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. *5 அதுதான் விரைவாக செயல்படுவதின் சக்தி. ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் உட்கொள்வது எலும்பு முறிவு அபாயத்தை 30% குறைக்கும் *6 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 0.5% முதல் 1.2% வரை மெதுவாகவே எலும்பு இழப்பு ஏற்படும். *7

ஆனால் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் பாதிப்பு சட்டென நிகழ்வதில்லை. இது பெரும்பாலும் ஆஸ்டியோபீனியாவுடன் தொடங்குகிறது - இது இயல்பாக இருப்பதை விடக் குறைவான எலும்பு அடர்த்தியின் ஒரு நிலை, ஆனால் ஆஸ்டியோபோரோசிஸ் எனக் கூற இயலாது. ஆஸ்டியோபீனியா ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்: அதை அலட்சியம் செய்தால், அது அறிகுறியின்றி ஆஸ்டியோபோரோசிஸ் ஆகலாம். *9,10 எனவே, ஆரம்பத்திலேயே இணை உணவுகள் மூலம் தடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது%.

சுருக்கமாகச் சொன்னால், இன்று உங்கள் எலும்புகளுக்கு நீங்கள் செய்வதே, அடுத்து வரும் ஆண்டுகளில் உங்கள் வலிமையை வடிவமைக்கிறது.

ஷேல்கல் 500 உடன் உங்கள் பயணத்தை துவங்குங்கள்- எலும்பு ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்க உங்களின் தினசரி கால்சியம் டோஸ்.

பொறுப்புத் துறப்பு: %https://www.fda.gov/regulatory-information/search-fda-guidance-documents/small-entity-compliance-guide-health-claims-calcium-and-osteoporosis-and-calcium-vitamin-d-and

இந்தியாவின் கால்சியத்தில் மறைமுக அபாயம்

இந்தியாவில் இணை உணவுகள் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால் அதில் அபாயம் இல்லாமல் இல்லை. என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மோசடியான, போலியான, பதிவு செய்யப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத மருந்துகளின் விற்பனை சதவிகிதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்த சந்தையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிட்டத்தட்ட 40% ஆக உள்ளதால்,போலி தயாரிப்புகள் பரவலாக கிடைப்பது பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்கு பெரும் கவலைகளாகும்.

ஷேல்கல் 500- நீங்கள் நம்பக் கூடிய ஒரு பெயர்.

ஷேல்கல் 500 நம்பிக்கையில் ஒரு தரத்தை அமைக்கிறது. இப்போது போலிகளுக்கு எதிராக மேம்படுத்தப்பட்ட எதிர்ப்பு அம்சங்கள் - மைக்ரோ-டெக்ஸ்டிங், யுவி கண்டறிதல் மற்றும் ஒவ்வொரு பேக் மற்றும் ஸ்ட்ரிப்பிலும் ஒரு தனித்துவமான க்யூஆர் குறியீடு அம்சங்கள் உள்ளதால், ஷேல்கல் 500-ன் அசல் தன்மையைக் கண்டறிவது மிகவும் எளிதாகி விட்டது.

பலப்பல ஆண்டுகளாக எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துவதில் ஷேல்கல் 500 ஒரு நம்பகமான பெயராக இருந்து வருகிறது. இது இந்தியாவில் நம்பர் 1 என டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் கால்சியம். இயற்கை வளங்களில் இருந்து பெறப்பட்ட அடிப்படை கால்சியத்தால் உருவாக்கப்பட்டு, உலக சுகாதாரக் கழகத்தின் கடினமான தரநிலைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டேப்லெட்டும் 500 மி.கி கால்சியம் மற்றும் 250 ஐயூ வைட்டமின் டி3- ஐ அளிக்கிறது - இது உங்கள் தினசரி ஆர்டிஏ தேவைகளை பூர்த்தியாக்குகிறது.

போலியான பொருட்கள் பற்றி கவலை ஏற்படும் இந்த காலத்தில், ஷேல்கல்500 விஞ்ஞானப் பூர்வ ஆதரவு பெற்ற, தரம் உறுதி செய்யப்பட்ட பிராண்ட் ஆகும். இது நம்பகமான பாரம்பரியத்தைக் கொண்டதோடு எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான நம்பகமான தேர்வாக அமைகிறது. எனவே, இது இந்தியாவின் மிகவும் நம்பகமான எலும்பு ஆரோக்கிய இணை உணவுகளில் ஒன்றாகும்.

உங்கள் ஷேல்கல் 500 அசல்தானா என்பதை சரிபார்ப்பது எப்படி?

பேக் பேனலில் தனிப்பட்ட க்யூஆர் கோட் உள்ளது

எலும்புகள் அமைதியாக இருக்கும், ஆனால் அவை அனைத்தையும் தாங்கும். உங்கள் உடலுக்காக ஒரு வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள் - உங்கள் எலும்புகளைக் கவனியுங்கள். ஷேல்கல் ஸ்ட்ராங் ஆக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு: ஷேல்கல்500 சரியான உணவுமுறை அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற்று அல்ல. நீங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவ பாதிப்புகள் இருந்தால் அல்லது அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

இந்த இணையதளப் பதிவில் உள்ள தகவல்கள் தொழில்முறை மருத்துவ அறிவு அல்லது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றானது அல்ல. ஒரு தகவலை மதிப்பிடும்போது, பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர் உடன் நீங்கள் பேசி ஆலோசனை பெறலாம். இந்த தளத்தில் இடம் பெற்றுள்ள எந்தவொரு தகவலையும் பயன்படுத்தி, எந்தவொரு நோய் அறிதல் அல்லது பெறும் சிகிச்சைக்கும்/செயலுக்கும் நாங்கள் உங்களுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.

தகவல் ஆதாரங்கள்:

*1. https://www.thelancet.com/journals/langlo/article/PIIS2214-109X(24)00276-6/fulltext

*2. http://ods.od.nih.gov/factsheets/Calcium-HealthProfessional/

*3. http://ncbi.nlm.nih.gov/books/NBK45504/

*4. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK45504/

*5. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S109469502300104X

*6. https://pubmed.ncbi.nlm.nih.gov/19209265/

*7. https://pubmed.ncbi.nlm.nih.gov/22609892/

*8. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1521690X23000568

*9. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK499878/?

*10. https://my.clevelandclinic.org/health/diseases/21855-osteopenia?

*11. https://www.thehindu.com/news/cities/Delhi/6070-of-dietary-supplements-in-the-market-are-fake-assocham-study/article7956126.ece?

*12. https://www.business-standard.com/article/news-ani/upto-70-percent-fitness-supplements-sold-in-indian-market-are-fake-assocham-115120700125_1.html?

“இது ஒரு விளம்பர செய்தி.”

மேலும் செய்திகள்