ராசிபலன் (07.01.2026): இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிமையாக முடியும் நாள்..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: புதன் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மார்கழி
நாள்: 23
ஆங்கில தேதி: 7
மாதம்: ஜனவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று மாலை 04-38 வரை மகம் பின்பு பூரம்
திதி: இன்று காலை 11-25 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 9-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 4-30 to 5-30
ராகு காலம்: மாலை 12-00 to 1-30
எமகண்டம்: காலை 7-30 to 9-00
குளிகை: காலை 10-30 to 12-00
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவி உறவு மேம்படும். விரும்பியவர் தேடி வருவர். உத்யோகத்தில் அமைதி நிலவும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
ரிஷபம்
வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வைப்புத் தொகையாக வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். வீடு மனையால் லாபம் வரும். பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடல் நலனில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பங்குச் சந்தை லாபம் கொடுக்கும். புதிய நபர்கள் அறிமுகமாவர். கொடுக்கல்–வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை குறையும். தேக ஆரோக்கியம் நன்கு தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
சிம்மம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். ஷேர்களில் யூனிட்களின் விலை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்துணை அமையும். மாணவர்கள் பொறுப்புணர்ந்து படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். பத்திரிக்கையாளர்கள் ஏற்றம் அடைவர். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். அரசியலில் இருப்பவர்களின் புகழ் ஓங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
குடும்பத்தில் அன்னியர்களின் தலையீடு உண்டாகும். அவற்றைத் தடுக்க வேண்டும். விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் வராது. ஆதலால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
விருச்சிகம்
உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. நீண்ட பயணம் மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதரவு உண்டாகும். அலைச்சலினால் புனித ஸ்தலங்களுக்குச் செல்ல முயற்சிப்போருக்கு காலதாமதம் ஏற்படும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும்.
அதிர்ஷட நிறம்: நீலம்
தனுசு
உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். பிள்ளைகள் நன்கு படிப்பர். தந்தை வழியில் பணம் வரும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிமையாக முடியும். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மகரம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கும்பம்
தம்பதிகளிடையே சிறு சலசலப்புகள் வந்து நீங்கும். சிலருக்கு வீடு அல்லது அலுவலக இடமாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதால் வெளிநபர்களின் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். திருமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
மீனம்
உத்யோகஸ்தர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபணமாகும். அரசு வழிகளில் ஆதாயம் உண்டாகும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். மாணவர்கள் உயர் படிப்பு படிக்க வெளிநாடு செல்வர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு