இன்றைய ராசிபலன் (22.01.2026): எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாக நிகழும் நாள்..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: வியாழக் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: தை
நாள்: 8
ஆங்கில தேதி: 22
மாதம்: ஜனவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-33 வரை சதயம் பின்பு பூரட்டாதி
திதி: இன்று அதிகாலை 02-58 வரை திரிதியை பின்பு சதுர்த்தி
யோகம்: மரண, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 10-30 to 11-00
நல்ல நேரம்: மாலை 12-30 to 1-30
ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00
எமகண்டம்: காலை 6-00 to 7-30
குளிகை: காலை 9-00 to 10-30
கௌரி நல்ல நேரம்: காலை -
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: தெற்கு
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
உறவினர்களிடமிருந்து நற்செய்திகள் வரும். மேலதிகாரிகள் தங்கள் செயல்திறனை கவனிப்பார்கள். உங்கள் மீது நன்நம்பிக்கை வரும்.கணவன் மனைவிக்குள் உள்ள வாக்குவாத்த்தால் தேவையில்லாமல் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. இனிப்புகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
ரிஷபம்
தொழிலை மேம்படுத்த புதிய திட்டங்கள் தோன்றும். அதனை செயல்படுத்துவீர்கள். தெய்வ நம்பிக்கை கூடும். வெளியூர் பயணம் ஏற்படும். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பெண்கள் செலவினை சமாளிப்பர். தேகம் பலம்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
மிதுனம்
மேலதிகாரிகளிடம் நல்உறவு ஏற்படும். அவர்கள் தங்களுக்குச் சலுகைகள் அளிப்பர். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. வழக்கறிஞர்கள் சாதனைபுரிவர். தங்களுக்கு பிடித்த கல்லூரி மற்றும் பள்ளியில் மாற்றம் செய்ய பெற்றோர்கள் சம்மதிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கடகம்
உதயோகஸ்தர்கள் பணியில் நாட்டம் கூடும். பெண்கள் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். குறுகிய தூர பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தலைவிகள் தங்கள் வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். கலைஞர்களுக்கு வாய்ப்பினால் மகிழ்வுண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கன்னி
பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தம்பதிகள் உறவில் சிக்கல்வராமல் இருக்க மனம்விட்டு பேசுங்கள். உத்யோகத்தில் அமைதியாக நிறைவுடன் செல்லும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
பெற்றோர் தங்கள் விடாமுயற்சியால் எதிர்காலத் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர் புதிய ஆர்டர்களை பெற யுத்திகளை கையாள்வர். வியாபாரிகள் கிளைகளை துவங்குவர். உத்யோகஸ்தர்கள் இன்று பணிகளை முடித்து வீட்டிற்கு விரைவில் சென்று குடும்ப வேலைகளை கவனிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
மனதில் நினைத்த்து ஒன்று இன்று பலிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். புதுமண தம்பதிகள் வெளியிடங்களுக்குச் சென்று திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
தனுசு
தம்பதிகளின் அன்பு பலப்படும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு விரைவில் தங்கள் படம் வெளியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மகரம்
உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். அதனை முடித்து விடுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
.வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்ப்பது நன்று. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். வேலையாட்களால் உதவிகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
வியாபாரிகள் தங்கள் விற்பனையைக் கூட்ட விளம்பரம் செய்வீர்கள். வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கடன் தொல்லை தீரும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பர். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு