ராசிபலன் (06.11.2025): நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
ராசிபலன் (06.11.2025): நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்..!
Published on

கிழமை: வியாழக் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஐப்பசி

நாள்: 20

ஆங்கில தேதி: 6

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 08-39 வரை பரணி பின்பு கிருத்திகை

திதி: இன்று மாலை 05-08 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம்: காலை 6-00 to 7-30

குளிகை: காலை 9-00 to 10-30

கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: சித்திரை

மேஷம்

உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்- மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

ரிஷபம்

வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

சுபகாரியம் நடந்தேறும். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

அத்தியாவசிய தேவை நிறைவேறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

வியாபாரிகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர். சற்று தங்களுடைய உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்ளுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முற்படுவார்கள். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது.வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவருக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும்.காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கும்பம்

அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். தம்பதிகளிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சென்றால் அனைத்து நன்மைகளும் தங்களுக்கு உண்டாகும். பெண்களின் சேமிப்புஉயரும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். உடல் நலம் பலம் பெறும். தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com