ராசிபலன் (07.11.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகரிக்கும்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-11-07 06:21 IST

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: வெள்ளிக் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஐப்பசி

நாள்: 21

ஆங்கில தேதி: 7

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 6-58 வரை கிருத்திகை பின்பு ரோகினி

திதி: இன்று பிற்பகல் 2-48 வரை துவிதியை பின்பு திரிதியை

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம்: காலை 9-15 to 10-15

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: காலை 10-30 to 12-00

எமகண்டம்: மாலை 3-00 to 4-30

குளிகை: காலை 7-30 to 9-00

கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: சுவாதி

இன்றைய ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் நினைத்த இடத்திலேயே இடமாற்றம் கிடைக்கும். உத்தியோக உயர்வு உண்டு. உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த சேமிப்பு தொகையை ஆபரணங்களாக வாங்குவர். மாமியார் மாமனார் உறவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பண வரவு அதிகரிக்கும். அதற்கேற்ப செலவுகளுக்கும் இடம் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலமாக அமையும். முன் கோபத்தை காட்ட வேண்டாம். பொறுமையை கையாளவும். உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

பணவரவுக்கு பஞ்சமில்லை. சுய தொழில் செய்பவர்களுக்கு ஒரு சிறு முதலீடுகள் செய்வீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய பிள்ளைகளின் உடல் நலனை பற்றிய கவலைகள் வந்து போகும். திருமண வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை உண்டு. இடுப்பு வலி ஏற்பட்டு பின்பு நீங்கும். மாமனார் வகை உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவர். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்லவும். திருமணமாகாத பெண்களுக்கு தங்கள் உறவிலேயே திருமணம் நடக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பிலும் மற்றும் விளையாட்டு துறையிலும் மேன்மை அடைவர். உடல் நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். கூடுமானவரை வீட்டு உணவினை உண்பது நல்லது.. ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கணவர் விட்டார் ஆதரவு தருவார் சகோதர சகோதரிகள் உதவி புரிவார். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தாங்கள் நினைத்ததற்கு மேலாகவே தங்கள் தொழிலில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த ஒரு தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

குடும்பத் தலைவிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தங்கள் பிள்ளைகளின் நடத்தையில் கவனம் தேவை. உடல் நலன் சீராக இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்கள் திறனை கண்டு பாராட்டுவார். தேக ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு சிக்கன நடவடிக்கைகள் தேவை. தம்பதியிடையே விட்டுக் கொடுப்பது நல்லது. மாமனார் மாமியார் உறவில் சிறு சிறு வாக்குவாதம் உண்டாகும். பொறுமை அவசியம். தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஒரு சிறு தொகையை சேமிக்க துவங்குவார்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கும்பம்

குடும்பத் தலைவிகளுக்கு விலை அதிகமான வீட்டு பொருட்களை கணவர் ஆர்டர் செய்வார். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வெளியூர்களுக்கு சென்று வருவர். மாணவர்கள் கவன சிதறலை தவிர்த்து படிப்பில் ஆர்வம் கொள்வது நல்லது. பெண்களுக்கு கை கால் வலி தொந்தரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

இளம் பெண்களுக்கு திருமணம் செட் ஆகும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த நபர் உங்களிடம் சரண் அடைவார். குடும்பத் தலைவிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த நகை கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

 

Tags:    

மேலும் செய்திகள்