பணப்புழக்கம் அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன் 17.01.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2026-01-17 05:56 IST

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் தை மாதம் 3-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 9.40 வரை மூலம் பின்பு பூராடம்.

திதி: இன்று முழுவதும் சதுர்த்தசி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 4.30 - 5.30

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மாலை 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம்: காலை 12.30 - 1.30, மாலை 9.30 - 10-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு நிர்வாகத்தில் முடிவெடுக்கும் திறன் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். தூரத்து சொந்தங்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய கடையை துவங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் சளித் தொந்தரவு வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

ரிஷபம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

மிதுனம்

சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் நீங்கும். பார்வைக் கோளாறு நீங்கும். ஆனால், பல் வலி வந்துபோகும். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை

கடகம்

சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சமரசமாக தீரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு புதுவேலை கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். முக்கியமான விஷயங்களில் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

சிம்மம்

வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். தொண்டை புகைச்சல் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும். சம்பள பாக்கி கைக்கு வரும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அமைதியாக பேசாமல் இருப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

தந்தை உறவு மேம்படும். அவர் தங்களுக்கு சாதகமாக இருப்பார். மனக்குழப்பம் தீரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபலங்கள் உதவுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

ஒரு பெரும் தொகை கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். திருமணத் தடை நீங்கும். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். செரிமானக் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்து நீங்கும். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

 

Tags:    

மேலும் செய்திகள்