கடன் பிரச்சினை தீரும்... இன்றைய ராசிபலன் 18.01.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2026-01-18 05:39 IST

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் தை மாதம் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 11.35 வரை பூராடம் பின்பு உத்திராடம்

திதி: இன்று அதிகாலை 1.19 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 7.30 - 8.30, மாலை 3.30 - 4.30

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: காலை 12.00 - 1.30

குளிகை: காலை 3.00 - 4.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.30 - 11.30, மாலை 1.30 - 2.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். காதல் கசக்கும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கும். திருமண விஷயத்தில் உள்ள குழப்பம் நீங்கும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

கடகம்

தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடனை அடைக்க வழிபிறக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி பேச்சு வெற்றி தரும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். கலைகளில் வெற்றிக் காண்பீர்கள். இளைஞர்கள் தங்கள் பொறுப்பினை உணர்வர். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

சிம்மம்

வீண்கவலைகளை விரட்டுவது நல்லது. தங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் உதவுவர். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி

குறுகிய தூர பயணங்கள் லாபம் தரும். வெளிநபர்களிடம் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். காதல் கண் சிமிட்டும். திரைப்படத்தில் நாட்டம் கூடும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

வியாபாரிகளின் உழைப்பு வீண்போகாது; லாபத்தை அள்ளித் தரும். தம்பதிகளுக்கிடையே மூன்றாமவரை தலையிடச் செய்ய வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் இனிப்புகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

நீண்ட தூரப் பயணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் கூடும். அருகிலுள்ள ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரம் லாபம் தரும். பயணங்கள் நன்மையில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மகரம்

புதியவர்களிடம் பழகும் கவனம் தேவை. காதலர்கள் கனவு பலிக்கும். தம்பதிகளிடையே வீண் சந்தேகம் வேண்டாம். உறவினர்கள் வந்து போவர். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கும்பம்

பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சோம்பல் நீங்கும். பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும், சம்பள அதிகரிப்பும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு திடீர் லாபம் உண்டு. குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை நீங்கும். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

 

Tags:    

மேலும் செய்திகள்