வார ராசிபலன் - 21.12.2025 முதல் 27.12.2025 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்;
இந்த வார ராசிபலன்:-
மேஷம்
எதிலும் முன்னோக்கிச் செல்ல விரும்பும் மேஷ ராசியினர் இந்த வாரம் குடும்ப பெரியவர்களின் ஆசிகளை பெற வேண்டும். அதன் மூலம் வெற்றிப் பாதையில் உள்ள பல்வேறு தடை தாமதங்கள் விலகும்.
தொழில் துறையினர் இந்த ஆண்டிற்கான இலக்கை எட்டி மகிழக்கூடிய காலகட்டம். வியாபாரிகள் நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் நற்பெயர் பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் நீண்ட கால ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட்டில் ரிஸ்க் உள்ள பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம். மாணவர்கள் தங்களுடைய ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
வேலைப்பளு காரணமாக மன அழுத்தம், தலைவலி, மூட்டு வலி ஆகியவை ஏற்பட்டு விலகும். நல்ல தூக்கமும் ஓய்வும் அவசியம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகத்திற்கு பசும்பால் தருவது நன்மை ஏற்படுத்தும்.
ரிஷபம்
மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் தூர தேசத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப சிக்கல்களில் நல்ல தீர்வு ஏற்படும். உறவினர்களுடன் சுமுகமான உறவு உண்டு.
தொழில்துறையினர் தொழில் விரிவாக்க முயற்சிகளில் ஈடுபடலாம். வியாபாரிகளுக்கு வெளிமாநில, வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த புதிய திறன்களை கற்றுக் கொள்வார்கள்.
ரியல் எஸ்டேட்டில் ஆவணங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் கல்வி மற்றும் சர்வதேச பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் உயர்கல்வி பெறும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவார்கள்.
செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு தகுந்த சிகிச்சைகள் மூலமாக விலகும். ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆடைகளும், பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுபொருள், புத்தகம் பரிசாக வழங்குவது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
மிதுனம்
அனைவருடனும் எளிதாக பழகும் தன்மை படைத்த மிதுனம் ராசியினர் இந்த வாரம் குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும்.
தொழில்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடலாம். வியாபாரிகள் நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்கள் வழக்கமான பணிகளிலும் கவனமாக இருக்கவும்.
ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த கடன் கைக்கு வந்து சேரும். ஷேர் மார்க்கெட்டில் நீண்ட கால பத்திரங்கள், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் சக நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து படிப்பது நல்லது.
வயிறு மற்றும் முதுகு ஆகியவற்றில் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். மன பதற்றத்தை தவிர்க்க வேண்டும். இரவில் சீக்கிரமாக உறங்க செல்வதும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவி செய்வதும் நல்லது.
கடகம்
குடும்பத்தின் மீது பற்று கொண்ட கடகம் ராசியினருக்கு குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
தொழில்துறையினருக்கு புதிய தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வார்கள். வியாபாரிகள் விளம்பரங்களில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் நட்பாக இருக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட்டில் குத்தகை ஒப்பந்தங்கள், வாடகை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட்டில் பெரிய முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் கருத்தரங்குகளில் கலந்து கொள்வார்கள்.
முதுகு, சிறுநீரகம் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டு விலகும். அடிக்கடி நீர் பருகவும். அதிகாலையில் மஞ்சள் கலந்த தண்ணீரை அரச மர வேருக்கு ஊற்றுவது, நாய்களுக்கு உணவளிப்பது ஆகியவை நன்மை தரும்.
சிம்மம்
நல்ல விஷயங்களில் ஈடுபட்டு மற்றவர் கவனத்தை கவரும் சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் கடன்கள் அடைபடும். வழக்கமான விஷயங்களில் கூட சிறிது அக்கறை எடுத்து செயல்பட வேண்டும்.
தொழில்துறையினருக்கு உற்பத்தி அதிகரிக்கும். வியாபாரிகள் அன்றாட வரவு செலவு கணக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நுணுக்கமான பணிகளில் எச்சரிக்கையாக இருக்கவும்.
ரியல் எஸ்டேட்டில் பெரிய முதலீடுகள் இந்த வாரம் வேண்டாம். ஷேர் மார்க்கெட்டில் சிறிய முதலீடுகள் செய்யலாம். மாணவர்கள் படிப்பதற்கான கால அட்டவணை அட்டவணை தயாரித்து அதன்படி செயல்படுவது நல்லது.
வைரஸ் தொற்று, சளி காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தினமும் காலையில் சூரிய வெளிச்சம் படும்படி நடை பயிற்சியும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு நெய் தானமாக தருவதும் நல்லது.
கன்னி
சிறிய விவரங்களில் கூட எச்சரிக்கையாக இருக்கும் கன்னி ராசியினர் இந்த வாரம் குழந்தைகளுடன் பொழுதுபோக்குகள் ஈடுபட்டு மகிழ்வார்கள். நண்பர்கள் மட்டும் குடும்ப உறவினர்களுக்காக செலவு செய்வீர்கள்.
தொழில் துறையில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வழிகாட்டுதல் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையை நீங்களே செய்வது நல்லது.
ரியல் எஸ்டேட்டில் ஆடம்பர சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளை செய்யலாம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை பெறுவார்கள்.
தொடர்ச்சியான வேலைகள் காரணமாக உடல் அசதி மற்றும் முதுகுவலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். கோவிலுக்கு வரும் இளம் பெண்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதன் மூலம் நன்மை ஏற்படும்.
துலாம்
ராஜதந்திர அணுகுமுறை கொண்ட துலாம் ராசியினருக்கு இந்த வாரம் வீட்டில் புதிய பொருட்கள் சேர்க்கை ஏற்படும். தாய் வழி உறவினர்களுடன் தொடர்பு ஏற்பட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
தொழில் துறையினர் பணியாளர் குறை கேட்டு சரிசெய்ய வேண்டும். வியாபாரிகள் வாடிக்கையாளர் கருத்தை கேட்டறியவும். உத்தியோகஸ்தர்கள் தனித் திறன்களை காட்டி செயல்படுவது அவசியம்.
ரியல் எஸ்டேட்டில் குடியிருப்பு சொத்துக்கள் விற்பனை ஆகும். ஷேர் மார்க்கெட்டில் பெரிய நிறுவன பங்குகளில் ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் மதிப்பெண் குறைந்த பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
சளி, இருமல், ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தினமும் புல் தரையில் சிறிது நேரம் நடப்பதும், அரச மரத்து அடியில் உள்ள பிள்ளையாருக்கு மஞ்சள் நிற மலர்களை சமர்ப்பிப்பதும் நன்மை தரும்.
விருச்சிகம்
நல்லது நடக்க ரகசியமாக செயல்படும் விருச்சிகம் ராசியினர் இந்த வாரம் நெருங்கிய நண்பர்களோடு அளவளாவி மகிழ்வார்கள். தகவல் தொடர்புகள் மூலம் பொருளாதார நிலை உயரும்.
தொழில்துறையினர் தங்களுடைய நெட்வொர்க்கிங் முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். வியாபாரிகள் குறுகிய தூர பயணம் மேற்கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக டூர் செல்வார்கள்.
ரியல் எஸ்டேட்டில் பெரிய முதலீடுகள் இந்த வாரம் வேண்டாம். ஷேர் மார்க்கெட்டில் மீடியா மற்றும் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் லாபம் தரும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகத்தை கேட்டு தெளிவு பெற வேண்டும்.
தூக்கமின்மை, தோள்பட்டை, கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்பட்டு வைத்தியம் மூலம் குணமடையும். காலை நேரங்களில் பசு மாட்டுக்கு கீரை அல்லது புல் உணவாக கொடுப்பதும், நடைப்பயிற்சியும் நன்மை தரும்.
தனுசு
தத்துவ ரீதியாக சிந்திக்கும் தனுசு ராசியினருக்கு புதிய பொருட்கள் சேர்க்கை ஏற்படும். நண்பர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் பரிசுகள் அளித்து மகிழ்வீர்கள். சமூகத்தில் மதிப்பு பெருகும்.
தொழில்துறையினர் கடந்த காலம் முயற்சிக்கான பலன்களை பெறுவார்கள். வியாபாரிகள் தனிப்பட்ட திறமைகளை பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் புதிய வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட்டில் சொத்துக்கள் விற்பனை ஆகும். ஷேர் மார்க்கெட்டில் வங்கி மற்றும் ஹோட்டல் முதலீடுகளில் லாபம் உண்டு. மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பம் செய்து இருந்தால் அது வந்து சேரும்.
கண் மற்றும் தொண்டை ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பெண்கள் துளசி செடிக்கு தீபம் ஏற்றி வைப்பதும், ஆண்கள் பெருமாள் கோவிலுக்கு மல்லிகை மாலை சமர்ப்பிப்பதும் நன்மை தரும்.
மகரம்
நடைமுறை விஷயங்களில் கவனம் செலுத்தும் மகரம் ராசியினருக்கு இந்த வாரம் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் மத்தியில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தொழில்துறையினர் அதிகாரத்தை நிலைநாட்டும் தருணம் இது. வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். உத்தியோகஸ்தர்கள் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டம் இது.
ரியல் எஸ்டேட்டில் நீண்டகால முதலீடுகள் செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் நிலவரத்தை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராக வேண்டும்.
வேலைப்பளுவால் முழங்கால் வலி, கணுக்கால் வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். பெருமாள் கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம், பக்தர்களுக்கு வெள்ளை எள்ளுருண்டை பிரசாதம் தருவதும் நல்லது.
கும்பம்
புதுமையான எண்ணமும் மனிதாபிமான குணமும் கொண்ட கும்பம் ராசியினர் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடும் காலகட்டம் இது. பண வரவு, முதலீடு குறித்த விஷயங்களை பிறரிடம் தெரிவிக்க வேண்டாம்.
தொழில்துறையினர் எதிர்கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வியாபாரிகள் நிலுவையில் உள்ள கடன்களை தீர்க்க முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளி மாநில வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய ஒப்பந்தங்களை சிறிது காலம் தள்ளி வைக்கவும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய இரண்டு முறை ஆலோசனை பெறவும். மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கான வாய்ப்பு பெறுவார்கள்.
சரியான தூக்கம் இல்லாததால் உடல் சோர்வு, கண்கள், பாதங்களில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். கோவில்களில் சேவை செய்வது, முதியோர்களுக்கு பொருள் தானம் செய்வதால் நன்மை ஏற்படும்.
மீனம்
கற்பனைத் திறனும், உள்ளுணர்வும் கொண்ட மீனம் ராசியினர் இந்த வாரம் நண்பர்கள் மற்றும் சகோதரர்களை சந்தித்து மகிழ்வார்கள். புதிய தொடர்புகள் மூலம் வாழ்க்கை மேம்படும்.
தொழில்துறையினர் சக நிறுவனங்களுடன் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக நடந்து கொள்ளவும்.
ரியல் எஸ்டேட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். ஷேர் மார்க்கெட்டில் பெரிய நிறுவன பங்குகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் கம்பைன் ஸ்டடி மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு வந்து சேரும்.
முட்டி மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் வீக்கம் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தினமும் அரச மரத்திற்கு மஞ்சள் தடவி, வேருக்கு நீர் வார்ப்பதாலும், சூரிய வெளிச்சம் படும்படி நடப்பதாலும் நன்மை உண்டு.