யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டர்

யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் மாடலில் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டர்
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,48,300. இதில் மேம்படுத்தப்பட்ட முகப்பு விளக்கு, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், மாறுபடும் வால்வு தொழில்நுட்பம் (வி.வி.ஏ.) உள்ள புளூகோர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது.

என்ஜின் சூடேறுவதைக் குறைக்க லிக்விட் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 155 சி.சி. திறன் கொண்ட நான்கு ஸ்டிரோக் என்ஜின் உள்ளது. 15 பி.எஸ். திறனை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப் படுத்தும்.

கருப்பு, நீலம், கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com