படப்பிடிப்பில் நடிகர் ராஜசேகர் படுகாயம்
நடிகர் ராஜசேகருக்கு படப்பிடிப்பின் சண்டை காட்சியின்போது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.;
தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ‘இதுதான்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் மனைவி நடிகை ஜீவிதா. இவர்களுக்கு 2 மகள்கள். இருவரும் நடித்து வருகின்றனர். இவர் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தற்போது படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
பிரஷாந்த் வர்மா இயக்கும் 'கல்கி' படத்தில் நடித்து வருகிறார். தற்போது ராஜசேகர் சர்வானந்த் நடிக்கும் பைக்கர் என்ற படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழில் வெற்றி பெற்ற லப்பர் பந்து தெலுங்கு ரீமேக்கில் முக்கிய வேடத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் சண்டை காட்சியை படமாக்கியபோது அவரது கணுக்காலில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. சிகிச்சைக்கு பிறகு ராஜசேகர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.