நடிகர் ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.;

Update:2025-11-08 11:04 IST

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதாவது பெங்களூரிவில் இருக்கும் ஹொசகேரேஹள்ளியில் வசித்துவரும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரது குடும்பத்தினவர் அவரை பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

84 வயதாகும் தனது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும் உடனடியாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். இதனை அறிந்த ரஜினியின் ரசிகர்கள் சத்யநாராயணா விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்