விருது வழங்கும் விழாவில் நடிகை ரெஜினாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்

நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் 20 ஆண்டுகால திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் டெமோக்ரடிக் சங்கா கேக் வெட்டி கொண்டாடியது.
விருது வழங்கும் விழாவில் நடிகை ரெஜினாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன், கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக, விடாமுயற்சியிலும் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். . இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் தி வைவ்ஸ் படத்தில் நடிக்க உள்ளார்.

ரெஜினா கேசண்ட்ரா திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், டெமோக்ரடிக் சங்காவின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ரெஜினாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த நிறுவனம் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது. தற்போது, மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com