ரீ-ரிலீஸான அஜித்தின் “அட்டகாசம்” படத்தின் வசூல் விவரம்
அஜித், பூஜா நடிப்பில் வெளியான ‘அட்டகாசம்’ படம் ரீ-ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் ரிலீசாகி வருவது டிரெண்டாகி இருக்கிறது. அந்தவகையில் 2004-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்து ‘ஹிட்' அடித்த ‘அட்டகாசம்’ திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி ரீ-ரிலீஸானது.
21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். அந்தவகையில் ‘அட்டகாசம்’ படத்தின் வசூல் ரூ.1 கோடியை நெருங்கியுள்ளது. ‘அட்டகாசம்’ படம் கல்லா கட்டி வருவதைத் தொடர்ந்து, அஜித்குமாரின் பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால், வீரம், வேதாளம் படங்களை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2014-ம் ஆண்டில் வெளியான ‘அஞ்சான்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் வசூல் ரூ.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது.