Anupama's 'Lockdown' release date changed

அனுபமாவின் ’லாக்டவுன்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்

இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாக இருந்தது.
Published on

சென்னை,

ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் அனுபமா நடிக்கும் 'லாக்டவுன்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளலாக் டவுன் திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

இந்நிலையில், 'லாக்டவுன்' படத்தின் ரிலீஸ் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாக இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com