ரசிகர்களுடன் 'பராசக்தி' படத்தை கண்டுகளிக்கும் பிரபலங்கள்

'பராசக்தி' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.;

Update:2026-01-10 11:06 IST

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை குழு 25 மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டு, U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில வசனங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராசக்தி படத்திற்கு வந்த பெரிய சிக்கல் நீங்கி, ஒரு வழியா இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது. அதனை தியேட்டர்களின் முன்பு குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பராசக்தி படத்தின் ஸ்பெஷல் ஷோவை ரசிகர்களுடன் கண்டுகளிக்க பிரபலங்கள் தியேட்டர்களுக்கு வருவை தந்துள்ளனர். அந்தவகையில், நடிகை ஸ்ரீலீலா, நடிகை ஷாலினி அஜித்குமார் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு சென்றுள்ளார். மேலும் ரவிமோகன், பாடகி கெனிஷா ஆகியோர் காசி தியேட்டருக்கும் படம் பார்க்க சென்றுள்ளார். அவர்களை ரசிகர்கள் தியேட்டர்களில் உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்