ரீ-ரிலீஸாகும் ராம் கோபால் வர்மாவின் “சிவா” படத்திற்கு சிரஞ்சீவி பாராட்டு

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜுனா நடித்த ‘சிவா’ படம் வரும் 14ம் தேதி வெளியாகவிருக்கிறது.;

Update:2025-11-09 16:16 IST

பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் முதல் திரைப்படமான சிவா மீண்டும் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் நாகர்ஜுனா நாயகனாகவும் அமலா நாயகியாகவும் ரகுவரன் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்தப் படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய பேரலையை ஏற்படுத்தியது. புதுமையான காட்சி அமைப்புகள், சிங்கிள் ஷாட்டுகள் என இந்திய சினிமாவையே புரட்டிபோட்டது எனலாம். தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான படமாகவும் இன்றளவும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், சிவா படம் வரும் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் சிரஞ்சீவி ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார். அதனைப் பகிர்ந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா. “நன்றி சிரஞ்சீவி அவர்களே, நான் தெரியாமல் எப்போதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். உங்கள் பெரிய மனதிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி” என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்