9 நாட்களில் தனுஷின் “இட்லி கடை” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-10-10 14:29 IST

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர். ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்தின் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்