ராஷ்மிகாவின் “தி கேர்ள் பிரண்ட்” படத்தின் 2வது வார வசூல் எவ்வளவு தெரியுமா?
ராஷ்மிகா, தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ள‘தி கேர்ள் பிரண்ட்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.;
தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்', ‘புஷ்பா-2', ‘சாவா' போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக இருக்கின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘தி கேர்ள் பிரண்ட்’ படமும் ராஷ்மிகா மந்தனாவின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது.
ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 7ந் தேதி வெளியானது. இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் 2வது வாரத்தில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.