போதைப்பொருள் விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜர்

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
போதைப்பொருள் விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜர்
Published on

சென்னை,

போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. அதனைதொடர்ந்து அவர்களை கடந்த மாதம் 28ந் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி, நடிகர் கிருஷ்ணா அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த் அன்று விசாரணைக்கு ஆஜராகாமல் கால அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதனை தொடார்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com