ரசிகர்களின் கேள்வி: அமலாபால் மீண்டும் நடிக்க வருவது எப்போது?

கோடிகளில் சம்பளம் கொடுத்தாலும் அமலாபால் படத்தின் வாய்ப்பை ஏற்கவில்லை.;

Update:2025-12-09 13:05 IST

சென்னை,

சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரை உலகில் நடித்து வந்த அமலாபால் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இலாய் என்ற மகன் இருக்கிறார். குடும்பத்துடன் கோவாவில் அமலாபால் தற்போது வசித்து வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய அமலாபால் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதையடுத்து புதிய படங்களில் அவரை நடிக்க வைப்பதற்காக பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்பு கொண்டு உள்ளனர். சில படங்களுக்கு அமலாபால் கதைகளையும் கேட்டுள்ளார். கதைகளை கேட்டு விட்டு கதை சரியில்லை இப்போது எனக்கு நேரமில்லை என்று கூறி பட வாய்ப்பை தட்டி கழித்து விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் புதிய படம் ஒன்றிற்கு அவருக்கு சம்பளமாக ரூ.1 கோடிக்கு மேல் தருவதாகவும் பேசப்பட்டது. ஆனாலும் அமலாபால் படத்தின் வாய்ப்பை ஏற்கவில்லை. கோடிகள் கொடுத்தாலும் தொடர்ந்து புதிய பட வாய்ப்பு களை ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

மீண்டும் அமலாபால் நடிக்க வருவது எப்போது என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் அவரை தொடர்பு கொள்ள முடியாமலும் தொடர்பு கொண்டாலும் அவர் புதிய வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்துவருவது ஏன் என்று திரை உலகில் கேள்வி எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்