’முதல் படம் பாதியிலேயே நிறுத்தம், 2வது வெளியாகவில்லை, 3வது ரிலீசானது, ஆனால்...- கிச்சா சுதீப்
கிச்சா சுதீப், தனது திரை வாழ்வின் துவக்க காலம் குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.;
சென்னை,
கன்னட நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப், தற்போது மார்க்கில் நடித்திருக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 25 அன்று கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாக உள்ளது. இந்த சூழலில், படக்குழு புரமோஷன் பணிகளில் மும்முரமாக உள்ளது.
ஒரு நேர்காணலில், கிச்சா சுதீப், தனது திரை வாழ்வின் துவக்க காலம் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‘ என்னுடைய முதல் படம் முழுமையாக படமாக்கப்படவில்லை. இரண்டாவது படம் படமாக்கப்பட்டது, ஆனால் ரிலீஸாகவில்லை. மூன்றாவது படம் வெளியானது, ஆனால் ரசிகர்கள் வரவில்லை. திரையரங்கின் ஓர இருக்கைகள் மட்டுமே நிரம்பியிருந்தன. இறுதியாக, சேது படத்தின் கன்னட ரீமேக்கில் எனக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது’ என்றார்.