'கேங்கர்ஸ்' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள "கேங்கர்ஸ்" படம் வருகிற 24-ம் தேதி திரைக்கு வர உள்ளது.;

Update:2025-04-19 20:08 IST

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வின்னர் படத்தின் கைப்புள்ள, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் மறுப்பக்கம் படத்தின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.

இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதாவது, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில்,கேங்கர்ஸ் படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்