ஜி.வி.பிரகாஷின் "ஹாப்பி ராஜ்" - பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான்

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்குகிறார்.;

Update:2025-12-07 18:38 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் 'பிளாக்மெயில்'. மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்க உள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக உள்ள இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.

பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு "ஹாப்பி ராஜ்" என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்