ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

‘டெக்ஸாஸ் டைகர்’ படம் இசை தொடர்பான இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

பேமிலி படம் படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்து இயக்கும் படம், டெக்ஸாஸ் டைகர். இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதில், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணி தாசன், சம்யுக்தா ஷான் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் டெக்ஸாஸ் டைகர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இது இசை தொடர்பான இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com